1st Azhagai Meet Conducted Successfully

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் ஜார்ஜ் அரங்கில் வைத்து நடை பெற்ற முதல் அழகை பொதுக்கூட்டம் பெரியவர்களின் ஆசிர் ஓடும் ,தூய  அந்தோணியார் துணையோடும் சிறப்பாக நடந்தது .

கூட்டத்தில் ,

  • நமது பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில்  விளையாட்டில் சாதனை புரிந்த மாணவி /மாணவர்களுக்கு பரிசு வழங்க பட்டது .
  • நமது ஊரை தூய்மையாக வைக்க உதவிய பஞ்சாயத்து பணியாளர்களுக்கும் , நமது ஊர் அமைதியாக இயங்க , நமது ஊரு மக்கள் நலமாக வாழ உதவும் தபால் துறை , மின்சாரம் துறை , தொலைபேசி துறையை சார்ந்த நண்பர்களை கவுரவிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்க பட்டது .
  • பின் நமது ஊர் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் ? எவ்வாறு செய்யலாம் ? என்று விவாதிக்க பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-

1)ஒரு புதிய அமைப்பிற்கு பதில் ,ஏற்கனவே நம் ஊருக்கு பொதுவாக இருக்கும் கிராம வளர்ச்சி மையம் சார்ந்து செயல் படுவது
2)அனைத்து செயல்பாடுகளும் நல்ல தொலை நோக்கு திட்டத்தோடு ,அனைவரும் அரியும் வண்ணம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்
3)அடுத்த கூட்டம் கிராம வளர்ச்சி மையம் மைதானத்தில் நடைபெறும்
4)நம் பண பரிவர்தணைகளை அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்படும்.அதை பராமரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்க படும்…
5)முதலில் கண்காணிப்பு கமரா ,குப்பை தொட்டி மற்றும் சர்கார் பள்ளி அருகில் உள்ள சாலை சந்திப்பு பாதுகாப்பாக மாற்றும் வேலைகள் முன்னுரிமை வழங்கப்படும்.

6)நிதி சம்பந்தமாக, உறுப்பினர்களிடமிருந்து மாதம்தோறும்ஒரு சிறிய பங்களிப்பை பெறுவது  நல்லது.

 

 

கூட்டத்தில், நாம் இணைந்து பணியாற்ற அனைவரும் தங்கள் ஆதரவு உண்டு என்று கூறினார்கள் . அதற்கு முதல் படியாய் ,நமது சர்கார் பள்ளிக்கூடம் அருகில்  இருக்கும் ,விபத்து அதிகம் நடக்கும் ,அபாயகரமான நான்கு வழி சாலை சந்திப்பை சரிசெய்ய நமது ஊரை சார்ந்த திரு. இளங்கோ அவர்கள் நன்கொடையாக ருபாய் 2 இலட்சம் தருவதோடு மட்டும் நின்று விடாமல்  , அந்த திட்டத்திற்கு முழு திட்டப்படம் கொடுத்து உதவினார்கள். திரு இளங்கோ அவர்களை அழகை இளைஞர் அணி சார்பாகவும் , அழகை ஊர் மக்கள் சார்பாகவும் நன்றியுடன் வாழ்த்துகிறோம்.

 

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!

  • Canal Project near Government School Junction

      PROJECT DETAILS FOR THE MAINTENANCE OF CANAL AND OPTIMIZE THE ROAD USAGE AREA   Initiated by Mr. Ilango -AZHAGAI- […]

  • 1st Azhagai Meet Conducted Successfully

    ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் ஜார்ஜ் அரங்கில் வைத்து நடை பெற்ற முதல் அழகை பொதுக்கூட்டம் பெரியவர்களின் ஆசிர் ஓடும் ,தூய  அந்தோணியார் துணையோடும் சிறப்பாக […]

  • 1st Azhagai Meet

    நாளை  நடைபெற இருக்கும் முதல் அழகை கூட்டத்திற்கு அனைவரும் வருக வருக என்று அழைக்கிறோம் . நாள் :- 11/06/2017.       [Total_Soft_Poll id=”2″]

One thought on “1st Azhagai Meet Conducted Successfully

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

*
*

Skip to toolbar